திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இன்று (11.12.2025) வியாழக்கிழமை வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்தைச் சேர்ந்த பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு மின் வாரியம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மின் தடை பகுதிகள்: வாளாடி துணை மின் நிலையம்: கீழப்பெருங்காவூர், முளப்பதுகுடி, வேலாயுதபுரம், பச்சாம்பேட்டை வளைவு, டி.வளவனூர், மாந்துறை, பிரியா கார்டன், வாளாடி, தண்டாங்கோரை, எசனைக்கோரை, அப்பாதுறை, தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், செம்பழனி.

மேலும், மேலவாளாடி, புதுக்குடி, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், நெருஞ்சலக்குடி, ஆங்கரை, நெய்குப்பை, ஆர்.வளவனூர், புதூர் உத்தமனூர், பல்லபுரம், வேளாண்கல்லூரி ஆகிய இடங்கள். மேற்கண்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
துறையூர் துணை மின் நிலையம்: துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு.
அம்மாப்பட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, காளிப்பட்டி, சிஎஸ்ஐ பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொத்தம்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், களிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகள். மேற்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

