திருச்சி தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் நடைபெற்ற துணை முதல்வரின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு 48 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .
DCM – 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின்
48 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

மேலும் இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட மற்றும் மாநகர வர்த்தக அணி சார்பில் சாதனையாளர் விருது வழங்கும் விழா திருச்சி பால்பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் செந்தமிழ் செல்வன் மற்றும் மாநகர அமைப்பாளர் கே பி கே சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர் .

விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்ட வர்த்தக அணி தலைவர் பாலாஜி வரவேற்றார்.

மேலும் இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு சாதனையாளர்களை ( எஸ் டிவி உரிமையாளர் பாலு, கே..எம்.எஸ்.ஹக்கீம் பிரியாணி உரிமையாளர் முகமது ஹக்கீம் காந்தி மார்க்கெட் கமலக்கண்ணன் உள்ளிட்ட 48 பேர்) கௌரவித்து அவர்களுக்கு விருது வழங்கி விழா பேருரை ஆற்றினார்.

இந்த விருது வழங்கும் விழாவில் மாநகர செயலாளர் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் மாவட்ட துணைச் செயலாளர் செங்குட்டுவன் மற்றும் வர்த்தக அணி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் , கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரையாற்றியதாவது:-

திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் தமிழக துணை முதல்வர் அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் 48 நிகழ்ச்சிகள் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு இன்று 24 வது நிகழ்வாக நமது திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 48 சாதனையாளர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்று வருவதாகவும் மேலும் இவர்களைப் பார்த்து மற்றவர்கள் இளைய சமுதாயத்தினர் சாதனை புரிய வேண்டும் என்பதற்காக இந்த விருந்து வழங்கப்படுவதாகவும் மேலும் உழைப்பால் உயர்ந்தவர்கள் நீங்கள் அனைவரும் என்றும் உங்களால் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்றும் இந்தியாவிலேயே இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளதாகவும் மேலும் நமது மாநிலம் முதலிடம் ஆக வருவதற்கு காரணம் தமிழக முதல்வர் தான் என்றும் நமது தமிழக முதல்வரின் இலக்கு பொருளாதாரத்தில் 2030 ல் ஒரு ட்ரில்லியன் அகாடமியை தொட வேண்டும் என்ற இலக்கை சாதித்துக் காட்ட வேண்டியவர்கள் நீங்கள்தான் என்றும், மேலும் தற்பொழுது மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் அவர்கள் 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் முதலீட்டை கொண்டு வந்துள்ளதாகவும் இதனால் 34 லட்சம் இளைஞர்கள் வேலைவய்ப்பு வழங்க வழிவகை செய்து வந்துள்ளதாகவும் இந்தியாவிலேயே அதிக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதில் முதலிடம் தமிழ்நாடு தான் என்று ரிசர்வ் வங்கியே கூறியுள்ளதாகவும் எனவே நாம் அனைவரும் முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி இந்தியாவிலேயே தமிழநாட்டின் பொருளாதாரத்தை முதலிடமாக கொண்டு வருவதற்கு பாடுபட வேண்டும் என்றும் மேலும் இன்றைய பிறந்தநாள் விழா நிகழ்ச்சி காணும் தமிழக துணை முதல்வர்கள் பல்லாண்டு வாழ நாம் அனைவரும் வாழ்த்துவோம் என எடுத்துரைத்தார்.

