தற்போது வீட்டு காவலில் ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்ட செயலாளர் நீலகண்டன். தமிழக அரசின் அடக்கு முறையா ?
திருச்சி மாவட்ட டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட செயலாளர் சே. நீலகண்டன் திருச்சி உறையூர் காவல் ஆய்வாளர் தலைமையில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாளை சென்னையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவ்வாறு அறவழியில் போராடும் ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்வது ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

