Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொட்டு வைத்து வரக்கூடாது , கழிவறைக்குச் சென்று வர ஏன் தாமதம் என அடிக்கும் அரசு பள்ளி கிறிஸ்தவ தலைமை ஆசிரியர் . கண்டு கொள்வாரா பள்ளிகளின் துறை அமைச்சர் ?

0

'- Advertisement -

கோவை சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் சூலூர் கள்ளப்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும், கழிவறைக்கு சென்று வர தாமதமானால் அடிப்பதாகவும் மாணவிகள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக தேவகிருபா ஜெயகிறிஸ்டி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சாதியை குறிப்பிட்டு தங்களை திட்டுவதாகவும், கழிவறைக்கு சென்று வர தாமதமானால் அடிப்பதாகவும் மாணவிகள் 5 பேர் பெற்றோருடன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

 

புகார் அளித்த பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகலத்தில் செய்தியாளர்களிடம் மாணவிகள் கூறுகையில், எங்கள் பள்ளியில் 4 கழிவறைகள் மட்டுமே இருக்கிறது. அதில் இரண்டு கழிவறைகள் செயல்பாட்டில் இல்லாததால் மீதம் உள்ள இரண்டை தான் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவிகளும் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் இடைவேளையின் போது கழிவறைக்கு சென்று வர தாமதம் ஆனதால் தலைமை ஆசிரியர் தங்களை அடித்தார்.

 

மேலும் அவர் எங்களை சாதியை குறிப்பிட்டு பேசுவதாகவும் பொட்டு வைத்து கொண்டு வர கூடாது, பூக்கள் வைக்க கூடாது என்று கூறுகிறார். மேலும் இரண்டு மாணவிகள் தங்களை காலணிகளை அணிந்து வர கூடாது என்று கூறுகிறார். இது குறித்து சக ஆசிரியரிடம் கூறினால், அந்த ஆசிரியரையும் தலைமை ஆசிரியர் மிரட்டுகிறார்.

 

மேலும் எங்களை அடித்து விட்டு அதனை வீட்டில் சொல்ல கூடாது, சிறிய விஷயத்தை பெரிதாக்க கூடாது என கூறினார். மேலும் தலைமை ஆசிரியர் தாக்கி ஒரு மாணவி மயக்கம் போட்டு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் என மாணவிகள் கூறினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைநடந்து வருகிறது. விசாரணைக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி  உரிய நடவடிக்கை எடுப்பார்  என எதிர்பார்க்கப்படுகிறது ( இதேபோன்று திருச்சி மேடப்புதூர்  பகுதியில் பட்டு வரும் ஓர் அரசு உதவிபட்டு வரும் ஓர் அரசு உதவி பெரும் மகளிர் உயர்நிலைப் பள்ளியிலும்  பொட்டு ( (திருநீர், குங்குமம்) வைத்து வரக்கூடாது என  இந்து மாணவிகளை கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது )

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.