திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள மேல கல்கண்டார் கோட்டையில் அச்சு முறுக்கு தயாரிக்கும் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தை திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை அம்பாள் நகர் பகுதியில் ஜெயரத்தினம் என்பவர் அச்சு முறுக்கு தயாரிக்கும் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அந்த கம்பெனியில் நேற்று திடீரென தீ ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று அச்சு முறுக்கு கம்பியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் மின்சாதன பொருட்கள், அச்சு முறுக்கு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், புக்குகள் மற்றும் மரத்தூள்கள் எரிந்து நாசமாகியது.
இந்த தீடீர் விபத்துக்கான காரணம் முதல் நாள் அச்சு முறுக்கு தயாரித்த பொழுது மரத்தூளில் இருந்து நெருப்பு பரவி தீப்பற்றி இருக்கலாம் என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

