திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் இடிக்கப்பட்ட வீட்டில் வைத்திருந்த காப்பர் வயர்களை திருடிய வாலிபர் கைது .
திருச்சியில் கண்டோன்மெண்ட் பகுதியில்
இடிக்கப்பட்ட வீட்டில் வைத்திருந்த காப்பர் வயர்களை திருடிய
வாலிபர் கைது .
திருச்சி கே கே நகர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 30)
இவரும் இவரது நண்பர் சையது இப்ராஹிம் இருவரும் கண்டோன்மெண்ட் வார்னஸ் ரோடு காவிரி நகரில் உள்ள ஒரு பழைய வீட்டை இடிக்கும் ஒப்பந்தம் எடுத்தனர். பின்னர் அந்த கட்டிடத்தை இடித்த போது கிடைத்த
காப்பர் வயர் மற்றும் வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றை சையது இப்ராஹிம் அருகில் உள்ள
ஒரு ஓர் அறையில் வைத்திருந்தார். இவற்றை மர்ம நபர் ஒருவர் திருடி சென்று விட்டார். இது தொடர்பாக வினோத் கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தில்லை நகர் வடக்கு
விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சிவா (வயது19) என்ற இளைஞரை கைது செய்து உள்ளனர்.

