திருச்சி ஸ்ரீரங்கத்தில்
சாலையோரம் நிறுத்தப்பட்ட லோடு
ஆட்டோவை திருடிய
வாலிபர்
கைது.
திருச்சி ஸ்ரீரங்கம்
பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 62) இவர் லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார். வழக்கம் போல் அங்குள்ள சாரி தெருவில் ஜானகிராமன் என்பவரது வீட்டின் முன்பு தனது லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் சென்று பார்த்தபோது வாகனத்தை காணவில்லை. தனது லோடு ஆட்டோவை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார். இது குறித்து பழனிச்சாமி ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசில் புகார் செய்தார். அப்புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் பதிவு செய்து ஆட்டோவை திருடி சென்ற தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு
தகுதியைச் சேர்ந்த சுகுமார் என்கிற சிலம்பரசன் (வயது 32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஆட்டோலை மீட்டு உள்ளனர் .

