300 மீட்டரில் தயாராகி வரும் திரி.🖕
திருச்சி அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில் மலைக்கோட்டையில்
கார்த்திகை தீப பணிகள் தீவிரம் .
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 3.12.2025 புதன்கிழமை மாலை 5 மணி அளவில் அருள்மிகு செவ்வந்தி விநாயகர், அருள்மிகு தாயுமான சுவாமி மற்றும் அருள்மிகு மட்டுவார் குழலம்மை உற்சவமூர்த்திகளுக்கு தீபாரதனை செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு அருள்மிகு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள 40 அடி உயரமான கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து அடி உயரமுள்ள செப்பு கொப்பரையில் 300 மீட்டர் பருத்தி துணிகளால் செய்யப்பட்ட திரியில் 700 லிட்டர் இலுப்பை எண்ணெய் நல்லெண்ணெய் நெய் ஆகியவை கலந்து ஊற்றி மகாதீபம் ஏற்றபட உள்ளது.
கார்த்திகை தீப திருவிழாவின் ஏற்பாடுகளை திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் பா. சீனிவாசன் மற்றும் அறங்காவலர்கள் கருணாநிதி, கலைச்செல்வி, ஸ்ரீதர் கோவிந்தராஜு மற்றும் திருக்கோயில் உதவி ஆணையர் செயல் அலுவலர் கா .அருட் செல்வன் மற்றும் உள்துறை கண்காணிப்பாளர் , பேஸ்கார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

