திருச்சி பொன்மலையில்
மோட்டார் சைக்கிளில்
போதை மாத்திரைகள்
கடத்திய வாலிபர் ஊசிகளுடன் கைது.
திருச்சி பொன்மலை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் பொன்மலை சாய்பாபா கோவில் முன்பு திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர் அப்போது அதில் தடை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு தீங்கு விளைவிக்கும் போதை மாத்திரை மற்றும் ஊசி மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பொன்மலை கீழ உடையார் தெரு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் ( வயது 23) என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து 100 மில்லி கிராம் எடை கொண்ட 48 போதை மாத்திரைகள், 2 ஊசிகள் போன்றவற்றை கைப்பற்றி உள்ளனர்.

