திருச்சியில் தாயுமானவர் திட்ட வாகன வாடகை பணத்தை முழுமையாக ஆட்டையை போட்டு வரும் அமராவதி கண்காணிப்பாளர் செந்தில்வேல்
.
தாயுமானவர் திட்டம் என்பது தமிழக அரசு 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளிலேயே ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் ஒரு திட்டமாகும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் ஆகஸ்ட் 12, 2025 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் உள்ள நியாய விலைக் கடைகளில் இருந்து வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது.
70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை எளிதாக்குவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் .
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள நியாய விலைக் கடைகளில் இருந்து வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது தற்போது மாநிலம் முழுவதும் 21.7 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
ஆனால் திருச்சி அமராவதி நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் செயல்படும் ரேஷன் கடைகளில் நடைபெறும் தாயுமானவர் திட்டத்திற்கு வாடகைக்கு வரும் வாகனங்களுக்கு அமராவதி சார்பில் தரும் பணத்தை அமராவதி கண்காணிப்பாளர் செந்தில்வேல் என்பவர் வானத்திற்கு ரூ.2000 என்பதை முழுமையாக ஆட்டையை போட்டு விடுகிறாராம் என கூறப்படுகிறது . ரேஷன் கடை பணியாளர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு இவ்வாறு செய்து வருகிறாராம் .
மேலும் ரேஷன் கடைகள் மாதம் தோறும் அதிகாரிகளுக்கு தர வேண்டுமென மாதம் 2000 ரூபாய் வசூல் செய்து வருகிறாராம் .
அமராவதியில் பணி மாற்றத்திற்கு ரூ.50 ஆயிரம் வசூல் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது .
அமராவதியில் தொடர்ந்து ( ரேஷன் கடையில் கூட ) மூன்று வருடம் பணியாற்றும் நபர்கள் கண்டிப்பாக வேறு இடங்களுக்கு பணி இட மாற்றம் செய்ய வேண்டும் , அப்படித்தான் செய்து வருகிறார்கள் .
ஆனால் அமராவதியில் செந்தில் வேல் உள்ளிட்ட சிலர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அதே இடத்தில் எப்படி பணியாற்றி வருகிறார்கள் என சகா ஊழியர்களே புலம்பி வருகின்றனர் . இதுகுறித்து உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் விருப்பமாகும் .

