படிக்கட்டில் அமர்ந்து தூங்கிய பயணி ரெயிலில் இருந்து விழுந்து பலி. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் …
திருவெறும்பூர் ரெயில் நிலையம் அருகே
படிக்கட்டில் அமர்ந்து தூங்கிய
பயணி ரெயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாப சாவு
தஞ்சையில் இருந்து சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் திருச்சிக்கு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் திருச்சிக்கு ஒரு பயணி டிக்கெட் எடுத்து ரெயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்தப் பயணி பொதுபெட்டியில் படிக்கட்டில் உட்கார்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது திருவெறும்பூர் ரயில் நிலையத்தை கடந்து வரும் பொழுது திடீரென்று அந்த பயணி தூக்க கலக்கத்தில் ரெயில் பெட்டியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ரெயில்வேஇருப்புப் பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவல் அறிந்து சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு வரைந்து சென்றார்.இதை எடுத்து ரெயிலில் தவறி விழுந்து இறந்த அந்தப் பயணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருச்சி இருப்பு பாதை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இறந்த பயணி யார்?எந்த ஊரை சேர்ந்தவர்?என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விவரம் தெரிந்தவர்கள் 9080563321 மற்றும் 9443472524 ஆக எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது .
ரெயில் பயணி ஒருவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

