திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில்
சிறுவனை மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதித்த தந்தை கைது
போலீசார் நடவடிக்கை.

திருச்சி காந்தி மார்க்கெட் ஆர்ச் பகுதியில் திருச்சி மாநகர போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர் .
அப்போது
17 வயது சிறுவன் ஒருவன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார் . அந்த சிறுவனை நிறுத்தி விசாரணை மேற்கொண்ட போது லைசென்ஸ் இல்லை என தெரிய வந்துள்ளது .
அதைத் தொடர்ந்து போலீசார் திருச்சி தனரத்தினம் நகர் ஐந்தாவது தெருவை சேர்ந்த அந்த சிறுவனின் தந்தையான முகமது நிஜாமுதீன் ( வயது 45 ) என்பவரை லைசன்ஸ் இல்லாமல் 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பாக சிறுவனை மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதித்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளனர்.

