தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர், ஆயுதப்படை மற்றும் காவல்துறை துணைத்தலைவர் ஆயுதப்படை ஆகியோரின் உத்தரவின்பேரில்
திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1-ம் அணி கமான்டண்ட் மு.ஆனந்தன் தலைமையில் இன்று
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் காந்தி மார்க்கெட் பகுதியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த சாலையோரம் உள்ள பசியுற்ற ஏழை எளிய மக்களுக்கு காவலர் உணவு ஊர்தி மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆய்வாளர் முருகேசன், தலைமை காவலர்கள் அமுதா, குணா ஆகியோர்கள் உடன் இருந்தனர்..