என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி முன்னெடுப்பிற்காக 40 நாட்கள் நாம் ஆற்றும் பணி என்பது, மீண்டும் தலைவரை அரியணை ஏற்ற பாடுபட வேண்டும் . அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .
திருச்சி தெற்கு மாவட்டத்தில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனை கூட்டம் .
திமுக முதன்மைச் செயலாளர் – அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு .
மாவட்ட செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில்
“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனை கூட்டம் திருச்சி “கலைஞர் அறிவாலயத்தில்” நடைபெற்றது .
இக்கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் – கே.என்.நேரு அவர்கள் பங்கேற்று வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி கூறியதாவது:-
வாக்குச்சாவடி வெற்றுச்சாவடி அல்ல என்னுடைய வாக்குச்சாவடியை வெற்றி சாவடியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தை தமிழகத்தின் முதல்வர் கழகத் தலைவர் தளபதி அவர்கள் மகாபலிபுரத்தில் நடைபெற்ற அனைத்து ஒன்றிய கழகச் செயலாளர்களையும் அழைத்து வைத்து நாம் என்ன செய்ய வேண்டும் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.
நம் டெல்டா மாவட்டத்தில் 41 கூட்டங்கள் அதில் முதல் கூட்டமாக திருச்சி தெற்கு மாவட்டம் ஆரம்பித்து வைத்திருக்கிறது .
நாளை (இன்று ) திருச்சியில் இருக்கின்ற மற்ற 9 தொகுதிகளின் கூட்டங்களும் முடிந்து விடும் மற்ற டெல்டா மாவட்ட கூட்டங்கள் இரண்டாம் தேதி அனைத்து கட்சியின் கூட்டத்திற்கு பின்பு சென்று கூட்டத்தை முடித்து விடுவோம் .
நவம்பர் 4 முதல் டிசம்பர் நான்கு வரை இந்தப் பணியை எப்படி செய்யப் போகின்றோம் ஏற்கனவே நீங்கள் செய்து வைத்தது..
ஒன்றிய அரசு எந்த ஆவணங்களை கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் .
நமது கட்சியின் புதிய ஆதரவு வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்றும் தகுதியற்ற அனைத்து வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளார்களா என சரி பார்க்க வேண்டும்.
வீடு வீடாக சென்று இந்த பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் .
திருச்சியில் நம்மை வெல்வதற்கு யாரும் இல்லை என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும் . கடந்த காலங்களில் திமுக எவ்வாறு இருந்தது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்
டெல்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் வென்று கழகத் தலைவர் தமிழக முதல்வரை மீண்டும் 2026 இல் அரியணையில் ஏற்ற அயராது பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரையாற்றிய போது
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி முன்னெடுப்பிற்காக 40 நாட்கள் நாம் ஆற்றும் பணி என்பது, மீண்டும் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை முதலமைச்சர் ஆக்குவதற்கான பணியாக அமையும். எனவே அனைவரும் அர்ப்பணிப்போடு செயல்பட்டு, கடந்த தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளையும் வென்றது போல, இந்த தேர்தலிலும் சாதனை படைத்திட, திருச்சி தெற்கு மாவட்டத்தில், 3 தொகுதிகளிலும் வெற்றியை உறுதிசெய்வோம்.

இக்கூட்டத்தில் மாநகர செயலாளர் மு.மதிவாணன், தொகுதி பார்வையாளர்கள் கதிரவன், மணிராஜ், அண்ணாமலை, மாவட்ட நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, செந்தில்,
மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநகர, நகர, பேரூர் வட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
 
						
 
						
