இனிமேல் பிஜி நாயுடுவில் இனிப்பு வாங்குவீங்க … பென்சோசல்பைமெடு கலந்து தயாரித்த இனிப்பு சாப்பிட்டு பாதிக்கப்பட்டவரின் புலம்பல்…
திருச்சியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கோவிந்தராஜுலு நாயுடு என்பவரால் பிஜி நாயுடு ஸ்வீட் நிறுவனம் தொடங்கப்பட்டு கடந்த நான்கு தலைமுறைகளாக திருச்சியில் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது பாலாஜி மற்றும் அவரது மகன் சாரநாத் பாலாஜி ஆகியோர் இந்த நிறுவனத்தை செயல்படுத்தி வருகின்றனர் .
நூறாண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் தற்போது பல கிளைகள் தொடங்கிய பின்பு கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக தரம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது .
தீபாவளி அன்று நண்பர்கள் உற்றார் உறவினர்களுக்கு அனைவரும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
இந்த நிலையில் தீபாவளி அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்த பி ஜி நாயுடு இனிப்புகளை ( லட்டு, மைசூர் பாகு , ஜாங்கிரி, பால் ஸ்விட்ஸ்) 5,6 பீஸ் சாப்பிட்டு உள்ளார். சாப்பிட்ட சில மணி நேரத்தில் அது வேலையை செய்ய தொடங்கியது . தொடர்ந்து ஆறு ஏழு முறை வயிற்றுப்போக்கு ஏற்பட்டது . தொடர்ந்து மழை பெய்து இருந்ததால் வீட்டின் அருகில் உள்ள மெடிக்கலில் சென்று வயிற்றுப்போக்கு நிற்க Lopart என்ற மாத்திரையை வாங்கி சாப்பிட்டு உள்ளார். ஒரு மாத்திரை சாப்பிட்டும் சரியாக இல்லாததால் 2 மாத்திரை போட்டு உள்ளார் .
அதன் பிறகு தான் பிஜி நாயுடு இனிப்பு வகையில் சர்க்கரை விலை கூட என்பதால் சர்க்கரைக்கு பதிலாக சாக்ரின் அதிக அளவு சேர்ப்பதாக தெரிந்துள்ளார்.( சாக்ரின் என்பது ஒரு செயற்கை இனிப்புப் பொருளாகும். இது சர்க்கரையை விட மிகவும் இனிப்பானது (சுமார் 500 மடங்கு) மற்றும் கலோரி இல்லாதது. பானங்கள், மிட்டாய்கள், மருந்துகள் மற்றும் பற்பசை போன்ற பல்வேறு உணவுப் பொருட்களில் சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.
இது ஒரு ஊட்டச்சத்து இல்லாத செயற்கை இனிப்பு ஆகும், பென்சோசல்பைமைடு என்றும் அழைக்கப்படுகிறது.)
சாக்ரின் கலந்து தயாரித்த இனிப்புகளை அதிக அளவில் சாப்பிடுவதால் என்ன பாதிப்பு ஏற்படும் என தனக்கு தெரிந்த மருத்துவரிடம் கேட்டபோது
சாக்ரின் (saccharin) கலந்த இனிப்புகளை அதிகமாகச் சாப்பிட்டால், அது பல ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகமாகலாம், இது இதய நோய், பக்கவாதம் மற்றும் நரம்பு, கண், கால் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அதிகப்படியான சாக்ரின் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்
நீரிழிவு நோய்: சர்க்கரைக்கு பதிலாக சாக்ரின் பயன்படுத்தினாலும், அதன் அதிகப்படியான நுகர்வு இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
இதய நோய்:
உயர் இரத்த சர்க்கரை அளவு இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.
பக்கவாதம்: நீரிழிவு நோயின் ஒரு பக்கவிளைவாக பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
நரம்பு பாதிப்பு:
நீடித்த உயர் இரத்த சர்க்கரை நரம்பு மண்டலத்தைப் பாதிக்கலாம்.
கண் மற்றும் கால் பிரச்சனைகள்:
நீரிழிவு நோயால் கண் மற்றும் கால் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
எனவே, சாக்ரின் போன்ற இனிப்புகளை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது எனக் கூறியுள்ளார் .
இதுக்கு முன்னாள் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியாற்றியவர் தனக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு தரமான உணவு என சான்று அளித்து வந்துள்ளார் ஆனால் தற்போது நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மருத்துவர் போஸ் திருச்சி புறநகரில் கள்ளிக்குடியில் உள்ள குடோன் மற்றும் இனிப்புகள் தயாரிக்கும் இடத்தில் இனிப்புகளை முறையான பரிசோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் முன்பு அந்தந்த கிளைகளில் இனிப்புகள் தயாரித்து பிரஷ் ஆக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். ஆனால் இப்பொழுது கள்ளிக்குடியில் இருந்து தயாரித்து வரும் இனிப்புகள் ( அங்கு சாக்ரின் கலந்து இனிப்புகள் தயாரித்தால் யாருக்கும் தெரியாது என்பதால் ) அனைத்து கிளைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் எடமலைப்பட்டி புதூர் , சுந்தர் நகர் , ஸ்ரீரங்கம் போன்ற ஓடாத கிளைகளின் இரண்டு மூன்று நாட்கள் விற்பனையாகாமல் இருந்த இனிப்புகள் மேலப்புதூர் பாலக்கரை போன்று வேகமாக விற்பனையாகும் கிளைகளுக்கு பழைய இனிப்புகள் மாற்றி அனுப்பி வைக்கப்படும் . எனவே திருச்சி பிஜி நாயுடு கிளைகளில் எங்குமே புதிதான தரமான இனிப்புகள் கிடைப்பதில்லை. பழைய சாக்கரின் கலந்த இனிப்புகள் தான் கிடைக்கின்றதாம்.
இதுக்கு முடிவு கட்டுவது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கையில் தான் உள்ளது .