Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் குவிந்த 750 டன் குப்பைகள்: கையுறை ரெயின் கோட் இல்லாமல் மழையிலும் குப்பைகளை அள்ளும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்.

0

'- Advertisement -

தீபாவளி பண்டிகை:திருச்சியில் குவிந்த 750 டன் குப்பைகள்

மட்டும் மழையிலும் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அள்ளிச்சென்றனர்.

 

தீபாவளியை முன்னிட்டு மலைக்கோட்டை பகுதிகளில் அதிகளவு வணிக நிறுவனங்களும், மாநகராட்சி அனுமதி பெற்று நூற்றுக்கணக்கான தற்காலிக தரைக்கடை வியாபாரிகளும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர். இதனால் மலைக்கோட்டை, என்எஸ்பி ரோடு, சிங்காரத்தோப்பு, சூப்பர்பஜார், பெரியகடைவீதி, சின்னகடைவீதி, காந்திமார்க்கெட் சாலை பகுதி என இப்பகுதிகளில் மட்டும் சுமார் 400 தூய்மை பணியாளர்கள் தற்போது தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

திருச்சியில் இன்று காலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் சாலையில் வீசப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் துணிகுப்பைகள் மழைநீருடன் கலந்து ஆங்காங்கே துர்நாற்றம் வீசுவதுடன் கூவம்போல காட்சியளிக்கிறது.

 

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு வெடித்து காணப்படும் குப்பை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தீபாவளி தினத்தன்று சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியில் இன்று சுமார் 1700க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.

மழை பெய்தாலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மழையையும் பொருட்படுத்தாது எந்த ஒரு கையுறை மற்றும் உபகரணங்கள் இல்லாமல், மழைக்கான பிரத்தியேக ஆடை கூட இல்லாமல் மழையில் நனைந்தவாறு குப்பையிலே அள்ளினர்கள் . இது போன்ற காலங்களில் மாநகராட்சி நிர்வாகம் அவர்களுக்கான கையுறை மற்றும் ரெயின் கோட் போன்றவற்றை வழங்கினால் அவர்களின் நலன் காக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

 

திருச்சியில் 65 வார்டுகளில் வழக்கமாக 350 டன் முதல் 400 டன் வரை குப்பைகள் தேங்கி கிடக்கும். ஆனால் தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு 750 டன் குப்பைகள் சேர்ந்துள்ளது.

அவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதேநேரம் மழையின் காரணமாக குப்பைகள் அள்ளும் பணி தாமதமாகி வருகின்றது.

இருந்த போதிலும் குப்பைகளை இன்று மாலைக்குள் முழுவதுமாக

மாலைக்குள் அகற்றும் பணி வேகமாக நடைபெற்ற அகற்றப்பட்டுவிடும் என்று

மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.