டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் மாபெரும் மரக்கன்று நடும் விழா
டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் மாபெரும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது .
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு வழிகாட்டுதலின்படியும் திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலர் அவர்களின் ஆலோசனை படியும், டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக சுவாமி விவேகானந்தா உயராய்வு மையம் மற்றும் திருச்சி மாவட்ட வனத்துறை இணைந்து மாபெரும் மரக்கன்று நடும் விழா பாரதிதாசன் பல்கலைக்கழக சுவாமி விவேகானந்த உயராய்வு மையத்தில் இன்று (17.10.2025) நடைபெற்றது.
இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் பேராசிரியர் ராஜேஷ் கண்ணா மற்றும் பதிவாளர் பொறுப்பு பேராசிரியர் காளிதாஸ் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினர் முனைவர் சுருளி நதி, சுவாமி விவேகானந்தா உயராய்வு மையம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல், வளாகப் பராமரிப்பு அலுவலர் பேராசிரியர் ஜெகன் குமார், ரூசா திட்ட இயக்குனர் பேராசிரியர் ரவிக்குமார், NSS ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம், மக்கள் தொடர்பு அலுவலர் திரு காத்தமுத்து, பாரதிதாசன் பணியாளர் நல சங்க தலைவர் முத்துக்குமார் மற்றும் செயலாளர் முல்லைவேந்தன், திருச்சி மாவட்ட வன விரிவாக்க வனவர் விக்னேஷ் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் புங்க மரக்கன்று, பாதாம் மரக்கன்று, நாவல் மரக்கன்று மற்றும் வேப்பங்கன்று என்று மொத்தம் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை பசுமை சோலையாக மாற்றும் வண்ணம் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கனவை நனவாக்கும் வண்ணம் இந்த மரக்கன்று நடும் விழா பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது .
பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் பல அபூர்வகையான மூலிகை மரங்கள் உள்ளன. அதாவது வெண் நாவல் விருச்சகம் வருடத்திற்கு இரண்டு முறை கனிகள் காய்கின்றது கருநாவல் மரம் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிலும் மிகுந்து காணப்படுகிறது. மிக அபூர்வ மூலிகையான கிருஷ்ணா கம்பளம் கொடியானது பாரதிதாசன் பல்கலைக்கழக நூலக துறையில் நடப்பட்டு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். ஆப்பிள் மர கன்றுகளும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் பல இடங்களில் நடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை பாரதிதாசன் பல்கலைக்கழக சுவாமி விவேகானந்தா உயராய்வு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் அவர்கள் ஏற்பாடு செய்து திறம்பட ஒருங்கிணைத்தார்.