Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வியாபார நோக்கத்திற்காக கடைகள் முன் உள்ள மரங்களை வெட்டி எரிபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா மாநகராட்சி ஆணையர் . வ உ சி பேரவை நிறுவனத் தலைவர் வையாபுரி

0

'- Advertisement -

திருச்சி மாநகர் முழுவதும் மாநகராட்சி சார்பிலும் பொதுப்பணித்துறை சார்பிலும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு மதங்களாக வளர்த்து பாதுகாத்து வருகின்றனர் .

 

இந்த நிலையில் திருச்சி தலைமை தபால் நிலையம் முதல் மேலப்புதூர் வரை சாலைகளின் இருபுறமும் மரங்களை நெடுஞ்சாலை துறை சார்பில் நட்ட மரங்களை பாதுகாத்து வரும் மாநகராட்சி, ஜோசப் கண் மருத்துவமனை எதிரில் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ள நகைக்கடைக்காக கடையின் முன் உள்ள மரங்களின் கிளைகளை துண்டு துண்டாக வெட்டி மாநகராட்சி குப்பை லாரிகளில் ஏற்றிய மாநகராட்சி பொன்மலை மண்டல துப்புரவு ஊழியர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு அகற்றினர் .

 

பொதுமக்கள் யா

filter: 0; jpegRotation: 90; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (0.42000002, 0.42000002);

ராவது தனிப்பட்ட முறையில் குப்பைகளை அள்ள வேண்டும் என கூறினால் எதுவும் செய்யாத மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பெரும் வணிகர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு இவ்வாறு மரங்களை வெட்டுவது நியாயமா என வ உ சி பேரவை நிறுவனத் தலைவர் வையாபுரி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் .

 

இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.