திருச்சியில் போலீசாரின் அதிரடி வேட்டையில் தொடர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர் உள்ளிட்ட 3 பேர் சிக்கினர். வின்னிங் தரும் நபர்….?
திருச்சியில் போலீசாரின் அதிரடி வேட்டையில் தொடர்
லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர் உள்ளிட்ட போதை மாத்திரைகள், குட்கா விற்ற 3 பேர் சிக்கினர்
பணம், மாத்திரைகள், போதை பொருள்கள் பறிமுதல்.
திருச்சி பாலக்கரை பகுதி முதலியார் சத்திரம் பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதை அடுத்து பாலக்கரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அபிராமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றதாக புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர் .அவரிடம் இருந்து 16போதை மாத்திரைகள்,சிரஞ்சுகள்,குளுக்கோஸ் பாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 4800 ஆகும்.
இதேபோல் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரக்கத்திற்குட்பட்ட மேல் காலனி மாரியம்மன் கோவில் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்றதாக ராம்ஜி நகர் மலைப்பட்டி சுந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் பாலக்கரை கெம்ஸ்டவுண் ரயில்வே ட்ராக் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக பாலக்கரை செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் வயது (வயது48) என்பவரை கைது செய்தனர். இவர் தொடர் லாட்டரி விற்பனை ஈடுபட்டு வரும் குணாவின் கையால் என கூறப்படுகிறது . இவர்களுக்கு வின்னிங் தரும் நபரை கைது செய்தால் மட்டுமே இங்கு லாட்டரி விற்பனையை நிறுத்த முடியும் என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர் . மேலும் அவரிடம் இருந்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.