Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எடமலைபட்டிப்புதூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

0

'- Advertisement -

திருச்சி எடமலைபட்டிப்புதூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை

அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு  மாவட்ட துணை செயலாளர் , மாமன்ற உறுப்பினருமான முத்துச்செல்வம் முன்னிலையில் வகித்தார் .

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4 வார்டு எண் 57 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எடமலைப்பட்டிபுதூர் தம்பியப்பா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

முகாமை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்வதையும் முகாமின் செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன்,மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் | உதவி ஆட்சியர் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், வட்டாட்சியர் பிரகாஷ், நகரபொறியாளர் சிவபாதம், மண்டலக் குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்க்காதேவி, மாமன்ற உறுப்பினர் ,ராமதாஸ், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.