திருச்சியில் முன் விரோதத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது.
திருச்சி வாமடம் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 20) இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக மற்றொரு கும்பலுக்கும்,இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தினேஷ்குமார் வாமடம் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு மர்ம கும்பல் தினேஷ் குமாரை வழிமறித்து
அவரிடம் தகராறு செய்து அரிவாளை காட்டி மிரட்டி உள்ளனர்.இந்த சம்பவம் குறித்து தினேஷ் குமார் தில்லைநகர் காவல் நிலையத்ல் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் தில்லை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இபி ரோடு பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 24) ஜெயில்பேட்டை சேர்ந்த ஜெயசீலன் (வயது 23) வினோத் (வயது 27)ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர், மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவர்கள் இரண்டு பேரை கைது செய்து அவர்களை திருச்சியில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அனுமதித்துள்ளனர்.
இதேபோன்று குணசீலன் தில்லை நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் தினேஷ் குமார், மாரியப்பன் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.