பராமரிப்பு பணியின் காரமாக நிருச்சி a மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (அக்.7) மின்சாரம் இருக்காது.
திருச்சி மெயின்காா்டுகேட் துணை மின் நிலைய பராமரிப்புப் பணியால் சஞ்சீவி நகா், ராஜீவ்காந்தி நகா், எம்ஆா்வி நகா், மூவேந்தா் நகா், ரத்னா நகா், வீரமுத்து நகா், மேல தேவதானம், கீழ தேவதானம், குருசாமி நகா், மதுரா காா்டன், பிள்ளையாா் கோயில் தெரு ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை அன்று (அக்.7) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இத்தகவலை தென்னூா் மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராமன் தெரிவித்தாா்.