திருச்சி அமமுக தெற்கு மாவட்ட நிர்வாக வசதிக்காக பகுதிக் கழகங்கள் மறுசீரமைப்பு. டிடிவி தினகரன் அறிவிப்பு .
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் நிர்வாக வசதிக்காக, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் பகுதிக் கழகங்கள் மறு சீரமைக்கப்பட்டு கீழ்காணுமாறு வட்டக் கழகங்களை உள்ளடக்கி செயல்படும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார் . அதன் விவரம் வருமாறு :-
தற்போது செயல்பட்டு வரும் மலைக்கோட்டை பகுதி, காந்தி மார்க்கெட் பகுதி, பாலக்கரை பகுதி மற்றும் ஏர்போர்ட் பகுதி ஆகிய பகுதி கழகங்கள் மறுசீரமைக்கப்பட்டு கீழ்காணுமாறு வட்டக் கழகங்களை உள்ளடக்கி மறுசீரமைக்கப்படுகிறது.
மலைக்கோட்டை பகுதிக் கழகம் – 12வது வட்டம், 13வது வட்டம், 14வது வட்டம், 14A வது வட்டம் மற்றும் 15வது வட்டம்
காந்தி மார்க்கெட் பகுதிக் கழகம் – 17வது வட்டம், 17Aவது வட்டம், 18வது வட்டம், 19வது வட்டம், 19Aவது வட்டம் மற்றும் 20வது வட்டம்.
பாலக்கரை பகுதிக் கழகம் – 33வது வட்டம், 34வது வட்டம், 49வது வட்டம் மற்றும் 50வது வட்டம்
மரக்கடை பகுதிக் கழகம் – 21வது வட்டம், 21Aவது வட்டம், 30வது வட்டம், 31வது வட்டம் மற்றும் 32வது வட்டம்
டிவிஎஸ் டோல்கேட் பகுதிக் கழகம் – 47வது வட்டம், 47Aவது வட்டம், 48வது வட்டம், மற்றும் 59வது வட்டம்
ஏர்போர்ட் பகுதிக் கழகம் – 61வது வட்டம், 61Aவது வட்டம், 63வது வட்டம், 64 வது வட்டம், மற்றும் 65வது வட்டம்
மலைக்கோட்டை பகுதி கழக செயலாளராக நாகநாதர் A.சிவக்குமார் (புதுத்தெரு, சிந்தாமணி,திருச்சி)
காந்தி மார்க்கெட் பகுதி கழக செயலாளராக வேதாந்திரி நகர் M.பாலு (காந்தி மார்க்கெட் பகுதிக் கழக செயலாளர்)
பாலக்கரை பகுதி கழக செயலாளராக என்.உமாபதி (பாலக்கரை பகுதிக் கழக செயலாளர்}
மரக்கடை பகுதி கழக செயலாளராக மரக்கடை கே.நாகூர் மீரான் (வள்ளுவர் நகர், மதுரை ரோடு, திருச்சி)
டி.வி.எஸ்.டோல்கேட் பகுதி கழக செயலாளராக கொட்டப்பட்டு சீனி.ஆனந்தகுமார் (ஏர்போர்ட் பகுதி 47Aலது வட்ட செயலாளர்)
ஏர்போர்ட் பகுதி கழக செயலாளராக சாத்தனூர் பி.மதியழகன் (ஏர்போர்ட் பகுதிக் கழக செயலாளர்)
மேலும், உறையூர், தில்லை நகர், ஜங்ஷன் மற்றும் காஜாமலை ஆகிய பகுதிக் கழகங்கள் மறுசீரமைக்கப்பட்டு கீழ்காணுமாறு வட்டக் கழகங்களை உள்ளடக்கி மறுசீரமைக்கப்படுகிறது.
உறையூர் பகுதிக் கழகம் – 8Aவது வட்டம், 9வது வட்டம், 10வது வட்டம், 11வது வட்டம், 11Aவது வட்டம், 23வது வட்டம், 23Aவது வட்டம் மற்றும் 24வது வட்டம்
தில்லை நகர் பகுதி – 22வது வட்டம், 25வது வட்டம், 26வது வட்டம், மற்றும் 27வது வட்டம்
தென்னூர் பகுதி – 28வது வட்டம், 29வது வட்டம், 51வது வட்டம் மற்றும் 52வது வட்டம்
ஐங்ஷன் பகுதி – 53வது வட்டம், 54வது வட்டம், 58வது வட்டம், மற்றும் 56வது வட்டம்
காஜாமலை பகுதி – 57வது வட்டம், 58வது வட்டம், 60வது வட்டம் மற்றும் 62வது வட்டம்
உறையூர் பகுதிக் கழக செயலாளராக M.சதீஸ்குமார் (உறையூர் பகுதில் கழக செயலாளர்).
தில்லை நகர் பகுதிக் கழக செயலாளராக S.கருப்பையா (தில்லை நகர் பகுதிக் கழக செயலாளர்)
தென்னூர் பகுதிக் கழக செயலாளராக தில்லை MR.சதாம் (அண்டக்கொண்டாள் தெரு, தென்னூர், திருச்சி).
ஜங்ஷன் பகுதிக் கழக செயலாளராக வெங்கட்ரமணி
(ஜங்க்ஷன் பகுதிக் கழக செயலாளர்)
காஜாமலை பகுதிக் கழக செயலாளராக எம்.கதிரவன் (காஜாமலை பகுதிக் கழக செயலாளர்)
கழக அமைப்பு ரீதியாக தற்போது
மறுசீரமைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பகுதி கழக செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மறுசீரமைக்கப்பட்டுள்ள வார்டு கழகங்கள் மற்றும் சார்பு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை தற்போதுள்ள நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட பகுதி மற்றும் வார்டுக்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .