காந்தி மார்க்கெட்டில் இரவு நேரத்தில் பெண்ணை அழைத்து வந்ததை தட்டி கேட்ட தொழிலாளிக்கு கத்திக்குத்து . சிறுவன் கைது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளிக்கு கத்தி குத்து சிறுவன் கைது .
திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மகன் சூரியமூர்த்தி (வயது 26 ) இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட் கட்டிட வளாகத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது அங்கு 17 வயது சிறுவன் ஒருவர் இரவு நேரத்தில் பெண்ணை அழைத்துக் கொண்டு அங்கு வந்து உள்ளார். இதனை பார்த்த சூரியமூர்த்தி அந்த சிறுவனிடம் சத்தம் போட்டு அனுப்பி உள்ளார்.
இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று தேவர் பூங்கா அருகில் சூரியமூர்த்தி வரும் பொழுது அவரிடம் சிறுவன் தகராறில் ஈடுபட்டு சூரியமூர்த்தி கத்தியால் குத்தி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த சூரியமூர்த்தி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .
இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சுமை தூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவனை பிடித்து கைது செய்து கூர்நோக்கில் இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.