Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கல்வித்துறை அமைச்சர் தொகுதியிலேயே அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படும் வட்டார கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புகார்.

0

'- Advertisement -

பள்ளிக்கல்வி அமைச்சர் தொகுதியில்

(மணப்பாறை ஒன்றியத்தில்) தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து விதிகளை காற்றில் பறக்க விடும் வட்டார கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களிடம் நேரில் கோரிக்கை மனு.

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் முதல் பருவம் முடிவடைந்து அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியன்று 2025-26 ஆம் கல்வியாண்டின் இரண்டாம் பருவம்*தொடங்கப்பட உள்ளது .

 

இந்தநிலையில் பள்ளிகள் திறக்கும் முதல் நாள் அன்றே மாணவர்களுக்கு பாடநூல் மற்றும் குறிப்பேடுகளை*வழங்குவதற்க்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது .

 

அதே நேரத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் பணி பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் விலையில்லா பொருட்களான பாடநூல்கள் மற்றும் குறிப்பேடுகளை

அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நேரடியாக கொண்டு சென்று ஒப்படைக்க

அனைத்து அலுவலர்களுக்கும் போதுமான அளவு நிதியினையும்

அரசு வழங்கி வருகிறது .

 

இந்த நிதியை தானே அபகரித்துக் கொள்ளும் நோக்கிலும், கற்றல் கற்பித்தல் திறனில் அக்கறை இல்லாமலும் செயல்பட்டு வருபவருமான திருச்சி மாவட்டம் , மணப்பாறை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் அ.ஜோசப் அந்தோணி

என்பார் மாணவர்களுக்கான இரண்டாம் பருவ விலையில்லா பாடநூல் மற்றும் பாடகுறிப்பேடுகளை பள்ளிகளுக்கு நேரடியாக கொண்டு சென்று ஒப்படைக்காமல் மணப்பாறை நகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள கிடங்கிற்கு ஆசிரியர்களை நேரில் வரவழைத்து எடுத்துச் செல்லச்

செய்துள்ளார் .

 

அது தொடர்பான புகைப்படம் மற்றும் விடியோக்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் (தொடக்கக்கல்வி)சென்னை ,

திருச்சி *மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களுக்கும்

26.09.2025 அன்றைய தினம் மாலையே அனுப்பப்பட்டுள்ளது .

 

எனவே அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்ட மணப்பாறை வட்டாரக் கல்வி அலுவலர் அ.ஜோசப் அந்தோணி

என்பார் மீது உரிய துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மணப்பாறை வட்டார கிளை கேட்டுக்கொள்கிறது..

மேலும் இப்புகார் தொடர்பாக இன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) ரவிச்சந்திரன்*அவர்களை திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது .

 

இந்த சந்திப்பில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் மற்றும் மாவட்டச் செயளாலர் நீலகண்டன்.தலைமையில் மேனாள் மாவட்ட தலைவர்

ம.சேவியர் பால்ராஜ்

மாவட்ட துணை செயலாளர்

சுரேஷ்ராஜ்

மணப்பாறை ஒன்றிய இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் இயக்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.