Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சமூக நீதி விடுதி கட்டும் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடையும் அமைச்சர் மதிவேந்தன் பேட்டி.

0

'- Advertisement -

250 மாணவிகள் தங்கிப் படிக்கும் வகையில் 15 கோடியில் கட்டப்படுகிறது:

திருச்சியில் சமூக நீதி விடுதி கட்டும் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடையும்

அமைச்சர் மதிவேந்தன் பேட்டி.

 

திருச்சியில் கட்டப்பட்டு வரும் சமூக நீதி விடுதி கட்டிடத்தை அமைச்சர் மதிவேந்தன பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அந்தப் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடையும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

 

திருச்சி கலெக்டர் அலுவலகம் சாலை ராஜா காலனி பகுதியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கல்லூரி மாணவிகளுக்கான சமூக நீதி விடுதி கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று திருச்சி வந்த அமைச்சர மதிவேந்தன் அந்த கட்டிடத்தை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:-

ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் 250 மாணவிகளுக்கு ராஜா காலனி பகுதியிலும், மாணவர்களுக்கு பஞ்சப்பூர் பகுதியிலும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. ராஜா காலனியில் கட்டப்பட்டு வரும் மாணவிகளுக்கான விடுதி கட்டுமான பணி இன்னும் ஒரிரு மாதங்களில முடிவடையும், தமிழ்நாட்டில் இது போல பல இடங்களில் புதிய விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது

 

ஏற்கனவே உள்ள விடுதிகள் புனரமைக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நவீன வசதிகளுக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் உள்ளடக்கியவாறு விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது. மாணவ மாணவிகள் தங்கி படிப்பதற்கு ஏதுவாக தனித்தனி அறைகள் அறைகளுக்குள்ளே தனி தனி கழிப்பறை, வசதி நூலகங்கள் படிக்கும் அறைகள் இணையதள வசதி என அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது சுகாதார முறையில் உணவு சமைப்பதற்கான சமையல் கூடம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் விடுதிகளில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஏதேனும் குறைகள் இருந்தால் அது நிவர்த்தி செய்யப்படுகிறது. விடுதிகளில் குறைகள் இருப்பதாக குறிப்பிட்டு கூறினால் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில், திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் அருள், மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம், தாட்கோ மாவட்ட மேலாளர் விஜயகுமார், தாட்கோ செயற்பொறியாளர் நவநீதகிருஷ்ணன் திருச்சி மேற்கு வட்டாட்சியர் பிரகாஷ், திமுக பிரமுகர் குமுளி தோப்பு மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.