திருச்சி முக்கொம்பூர் மேல்ணையில்
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன்.
நீண்ட தேடலுக்கு பின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து குளித்து ம மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவன் ராகித் அகமது என்பவர், காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தண்ணீர் சற்று அதிகமாக சென்ற காரணத்தால் மாணவனின் உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பின்னர் உடலை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு சிறுவனின் உடலை கைப்பற்றி உள்ளனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .