திருச்சி சோமரசன் பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட
உய்யகொண்டான் வாய்க்காலில் தவறி விழுந்த வயதான பெண்ணை உயிருடன் மீட்ட போலீசார்.
அதவத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மனைவி இளஞ்சியம் (வயது 65)
மேற்கண்ட இளஞ்சியம் என்பவர் அதவத்தூர் பகுதியில் உய்ய கொண்டான் வாய்க்காலில்
நேற்று 29/09/25 ஆம் தேதி 12:00 மணி அளவில் தவறி விழுந்தவர் அரை மயக்கத்துடன் இரண்டு கிலோ மீட்டர் வாய்க்காலிலேயே மிதந்து வயலூர் பகுதியில் கடந்து வந்து கொண்டிருந்தவரை சாலையில் சென்று வழிப்போக்கர்கள் பிரேதம் மிதந்து வருவதாக தகவல் கூறியதன் பேரில் சென்று பார்த்த போது உய்யக்கொண்டான் வாய்க்காலில் மிதந்து வந்த வயதான பெண்மணியின் தலை அசைவது போல் தெரிந்தது
உடனடியாக
சோமரசம்பேட்டை தனிப்பிரிவு தலைமை காவலர் கார்த்திகேயன்
மற்றும் அதே காவல் நிலைய காவலர் கணேஷ்மோகன்
ஆகிய இருவரும் உய்யகொண்டான் வாய்க்காலில் நீந்தி சென்று மூதாட்டி இளஞ்சியத்தை உயிருடன் மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூதாட்டி வீட்டிற்கு தகவல் கூறப்பட்டது.
தற்சமயம் மூதாட்டி பூரண உடல் நலமுடன் உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது .
வாய்க்காலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மூதாட்டியை உயிருடன் மீட்ட போலீசாரே பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்