திருச்சி மாவட்டத்தில் 1500 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளர் இன்று அதிரடி கைது .
மின்வாரிய வணிக ஆய்வாளர் கையூட்டு பெற்றமைக்காக இன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் .
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்ற கால்நடை மருத்துவரிடம் அவரது வீட்டுமனையில் கட்டப்பட்ட கட்டிடத்திற்க்கு பெறப்பட்ட தற்காலிக மின் இணைப்பை நிரந்தர வீட்டு மின் இணைப்பாக மாற்ற வேண்டி விண்ணப்பித்ததன் பேரில், நிரந்தர வீட்டு மின் இணைப்பு வழங்க, ஏற்பாடு செய்ய திருச்சி, தாத்தையங்கார்பேட்டை மின்வாரிய வணிக ஆய்வாளர் பழனியாண்டி என்பவரின் மகன் சரவணன் (வயது 56) என்பவரிடம் அணுகிய போது கடந்த 25.09.2025ந் தேதி, மின்வாரிய வணிக ஆய்வாளர் சரவணன் ரூ.1,500/- கையூட்டு கேட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று 29.09.2025ந் தேதி திங்கட்கிழமை கால்நடை மருத்துவர் முத்தையா திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று 29.09.2025ந் தேதி துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது மின்வாரிய வணிக ஆய்வாளர் .சரவணன் லஞ்சப்பணம் ரூ.1,500/-ஐ கால்நடை மருத்துவர் முத்தையாவிடம் இருந்து கேட்டு பெற்று வைத்து இருந்த போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
இது தொடர்பாக திருச்சி, தாத்தையங்கார்பேட்டை மின்வாரிய மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.