திருச்சியில் தேர்வு விடுமுறையில் உய்யக் கொண்டான் வாய்க்காலில் நீச்சல் தெரியாமல் குளித்த 11ம் வகுப்பு மாணவன் மூழ்கி பலி
திருச்சியில்
தேர்வு விடுமுறையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள உய்யக் கொண்டான் வாய்க்காலில் நீச்சல் தெரியாமல் குளித்த 11 ம் வகுப்பு மாணவன் மூழ்கி பலி
திருச்சி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் உத்தேந்திரன்
(வயது 16)
இவர் திருச்சியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருந்தார். இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் திருச்சி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள உய்யக் கொண்டான் வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது அங்கு தண்ணீர் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் வாய்க்காலில் குளித்த உத்தேந்திரன் திடீரென்று தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராடி வாய்க்காலில் முழ்கி இறந்த உதேந்திரன் உடலை கைப்பற்றினர். பிறகு பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
காலாண்டு தேர்வு விடுமுறை நாளில் வாய்க்காலில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீச்சல் தெரியாமல் வாய்க்காலில் முழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.