திருச்சி நான் முதல்வன் திட்டம் அறிமுகப் பயிற்சி.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நான் முதல்வன் திட்டம் 2022 முதல் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
முதலாமாண்டு இளங்கலைப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான அறிமுகப் பயிற்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரியார் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்த “நான் முதல்வன் திட்ட அறிமுக பயிற்சிக்கு திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர். கே. இராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளங்கலை மாணவ மாணவியர்களுக்கு எவ்வாறு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும் இத்திட்டத்தின் மூலம், SCOUT என்ற வெளிநாட்டு கல்வி முறையை அறிய இங்கிலாந்து, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் பயிற்சி பெற தமிழ்நாடு அரசால் இலவச வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரி மட்டுமல்லாமல் தனியார் கல்லூரிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் பயிற்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர் என்றும் சிறப்பாக எடுத்துரைத்தார்.
மேலும், தமிழ்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் உயர்வுக்குப்படி ஆகிய திட்டங்களையும் தமிழக அரசு மாணவர்கள் பயனடையும் வண்ணம் செயல்படுவதாக எடுத்துரைத்தார்.
இவ்விழாவானது தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் எ. கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியை நான் முதல்வன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ப. இராஜாங்கம் ஏற்பாடு செய்தார். ஆங்கித்துறை பேராசிரியர் நோபல் ஜெபக்குமார், தேர்வு நெறியாளர் து. தனலெட்சுமி, பேராசிரியர் வி. நாராயண நம்பி, மற்றும் பேராசிரியர் T. பாவேந்தன் மற்றும் பேராசிரியர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.