ஸ்ரீரங்கத்தில் பாட்டியின்
பசுமாட்டை திருடிய
வாலிபர் கைது
திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 64 ) இவர் பசு மாடு வளர்த்து வருகிறார் .
வழக்கம் போல் தனது வீட்டின் முன்பு தாது பசு மாட்டை கட்டி இருந்தார் .
சம்பவத்தன்று நள்ளிரவு மர்ம நபர்கள் அந்த பசுமாட்டை திருடி சென்று விட்டனர்
இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் மணிமேகலை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .
இதில் குளித்தலை பழைய மருத்துவமனை தெரு பகுதியைச் சேர்ந்த கர்ணன் (வயது 21)
என்பவர் பசுமாட்டை திருடி சென்றது தெரிய வந்தது அதை தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.