திருச்சி.கலெக்டர் அலுவலகம் அருகே 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கத்தின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம். காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு .
திருச்சி.கலெக்டர் அலுவலகம் அருகே 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை
அனைத்து சங்கத்தின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.இன்று மாவட்ட அளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஆர்ப்பாட்டத்தில் தூய்மை காவலர்களின் மாதாந்த ஊதியத்தை ரூபாய் பத்தாயிரம் ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்க வேண்டும் சிறப்பு காலமுறை ஊதியத்தை தற்போது காலமுறை உதயமாக நிர்ணயத்தை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கணினி இயக்குபவர்கள் சங்க மாநிலத் தலைவர் ரவி தலைமை தாங்கினார்.திருச்சி மாவட்ட தலைவர் அழகுமலை முன்னில வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் ஆனந்த் சிறப்புரையாற்றினார்.
வருகின்ற அக்டோபர் 29ஆம் தேதி புதன் கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும்
நவம்பர் 24ஆம் தேதி திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்று அறிவித்துள்ளனர்.