திருச்சி உறையூரில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் அதிரடியாக கைது
பணம், ஆவணங்கள் பறிமுதல்.
திருச்சி உறையூர் அண்ணாமலை நகர் பகுதியில் லாட்டரி சீட்டுக்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நளினி தலைமையிலான உறையூர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று, தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது அண்ணாமலை நகர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக சோமரசம்பேட்டை மல்லியம்பத்து பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் நம்பர்கள் எழுதியதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.