திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ பிரிவு சார்பில் கட்டப்பட்ட உள் நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை கட்டிடத்தை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார் .
திருச்சி, புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல் படும் ஆயுஷ் பிரிவில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் இயற்கை யோகா மருத்துவ முறைகள் இயங்கி வருகிறது. இந்த ஆயுஷ் பிரிவுகளில் தனித்தனியே வெளி நோயாளிகள் பிரிவும், 16 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பகுதியும் இயங்கி வருகிறது.
உள்நோயாளிகள் பிரிவில் தற்போது மேற் சொன்ன சிறப்பு சிகிச்சைகளை 25 முதல் 30 பேர் எடுத்து பயன் பெறுகின்றனர். இப்பொழுது இந்த சிகிச்சை பிரிவுகளுக்கான இடவசதி திருச்சி சித்த மருத்துவ பிரிவு சார்பில்ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டதனால் பொதுமக்கள் இன்னும் அதிக அளவில் பயன்பெற கூடும்.
சிறப்பு சிகிச்சைகளான வர்மா, தொக்கணம், கட்டு, பற்று, ஒற்றடம், நீராவி பிடித்தல் போன்ற சிறப்பு புற சிகிச்சைகள் செய்வதற்கு ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே இடவசதி செய்யப்பட்டுள்ளதால் அனைத்து உள் மற்றும் வெளி நோயாளிகளும் இதனால் இனி பயனடைய கூடும் .. இந்த ஆயுஷ் மருத்துவ பிரிவில் தற்போது வெளி நோயாளிகள் எண்ணிக்கை ஒரு நாளைக்கு ஏறத்தாழ 500 பேருக்கு மேல் பயன் பெற்று வருகின்றனர்.
இந்த புதிய கட்டிடத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று 23.9. 2025 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மாவட்ட ஆட்சி த் தலைவர் சரவணன், திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட செயலாளர் வைரமணி , மாவட்ட துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான முத்து செல்வம் , அரசு மருத்துவமனை முதல்வர் குமரவேல், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வத்சலா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசி . மருத்துவர்கள் சுதா, சபரி, மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட படர் கலந்து கொண்டனர்