திருச்சியில் 2 நாள் நடைபெற்ற தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் 10 -வது மாநில மாநாட்டில் சுமை பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் .
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் 10 -வது மாநில மாநாடு திருச்சியில் நேற்றும் இன்றும்
நடைபெற்றது.
மாநாட்டின் முதல் நாளான நேற்று
திருச்சி பிராட்டியூர் தமிழ்நாடு பொது நிலையினர் பணிக்குழு அரங்கில் தோழர் ஜே. லாசர் நினைவரங்கத்தில் நடந்த பொது மாநாட்டிற்கு சம்மேளன தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமை தாங்கினார்.
மாநாட்டுக் கொடியை சம்மேளன துணைத்தலைவர் எம்.அர்த்தநாரி ஏற்றினார்.
சம்மேளன துணைச்செயலாளர்
ஆர்.சிவக்குமார் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை
சம்மேளன துணைத்தலைவர் அ. பிச்சைமுத்து வாசித்தார். சி.ஐ.டி.யு மாநில செயலாளர் சி. திருவேட்டை துவக்க உரையாற்றினார். நடைபெற்ற பணிகள் – அமைப்பு அறிக்கையை
சம்மேளன பொதுச்செயலாளர் ஆர்.அருள்குமார் வாசித்தார். நிதிநிலை அறிக்கையை
சம்மேளன பொருளாளர் பி. குமார் சமர்ப்பித்தார்.
மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பாக்சர் முகமது அலியின், நிறவெறிக்கு எதிரான அரசியல் களம் குறித்த நானே மகத்தானவன் என்ற
புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
புத்தகத்தை சம்மேளன தலைவர் ஆர்.வெங்கடபதி வெளியிட அதனை
சம்மேளன
சிறப்பு தலைவர் எஸ்.குணசேகரன் பெற்றுக் கொண்டார்.
சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ்.ரெங்கராஜன், சிஐடியு முன்னாள் மாநில செயலாளர் ஆர்.ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாராட்டில்
……
தொழிலாளர் விரோத , மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு , மதவெறியைத் தூண்டும்,நவ பாசிசக் கொள்கைகளை கையாளும் ஆர்எஸ்எஸ்- பிஜேபி
அரசையும்,
சென்ட்ரல் ஹவுஸ் கார்ப்பரேஷன் , கன்ட்டெய்னர் டெர்மினல் போன்ற பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும்
ஒன்றிய அரசின்
நடிவடிக்கைகளைக் கண்டித்தும், ரயில்வே குட்செட் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
தொழிலாளர் கொள்கையில் தமிழ்நாடு அரசு தனது அணுகுமுறையை மாற்ற வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
தொடர்ந்து 35 நாட்களுக்கும் மேலாக போராடும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசி தீர்வு காண வேண்டும்.
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கேரளா போல் தனி நல வாரியம் உருவாக்க வேண்டும்.
சுமைப்பணி தொழிலாளர்களின்வேலை பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் வகையில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும், சரக்கு பரிவர்த்தனை மதிப்பில் 2 சதவிகித சேம நலநிதி உருவாக்கி சமூகநலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் ,
வருடத்திற்கு ரூ48,000 கோடி லாபமீட்டும் டாஸ்மாக் நிர்வாகம் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஸ்கேனிங் கூலி, போனஸ் வழங்கி, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தி, குறைந்தபட்ச கூலிச் சட்டம் அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும்.
பி.டி.ஓ.கூட்டுறவு, தமிழ்நாடு வேர் ஹவுஸ் குடோன் ,
டிஎன்சிஎஸ்சி- டிபிசி
குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய குறைந்தபட்ச கூலி, சமூக நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்,
நிரந்தரப் பணிகளில் உள்ள காண்ட்ராக்ட் முறையை ஒழித்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில தலைவர்
அ.சவுந்தரராசன் நிறைவுறையாற்றினார். முடிவில் சுமைப்பணி சங்க திருச்சி மாவட்ட தலைவர் ரமேஷ் நன்றி கூறினார். பின்னர் திருச்சி காந்தி மார்க்கெட், காந்தி சிலையிலிருந்து சுமைப்பணி தொழிலாளர்களின் கோரிக்கை விளக்க பேரணி நடைபெற்றது.
இதையடுத்து மாலை 6 மணிக்கு குட்செட் ரோடு முதலியார் சத்திரத்தில் தோழர் எம்.ஏ.பாபு நினைவு பொதுக்கூட்டத் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
முடிவில் சிஐடியு லாரி புக்கிங் ஆபீஸ், ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் திருச்சி மாவட்ட செயலாளர் ராமர் நன்றி கூறினார்.