Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கரூர் வைஸ்யா வங்கி சார்பில் திருச்சியில் இணைய (சைபர்) பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புரை திட்டத்தை போலீஸ் கமிஷனர் காமினி தொடங்கி வைத்தார் .

0

'- Advertisement -

திருச்சியில் இணைய (சைபர்) பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கும் கரூர் வைஸ்யா வங்கி

 

60 நாட்கள் நிகழ்வாக இது நடத்தப்படுகிறது.

 

இந்நாட்டின் பிரபல தனியார் துறை வங்கிகளுள் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) திருச்சி மாநகரில் 60 நாட்கள் நிகழ்வாக நடைபெறும் இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புரை திட்டம் தொடங்கப்படுவதை அறிவித்திருக்கிறது,

“கேவிபி சொன்னா கேளுங்க, டிஜிட்டல் மோசடியில் சிக்காதீங்க” என்ற தலைப்பில் பொதுமக்களுக்கும், குறிப்பாக மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், வயது முதியோர் மத்தியில் விழிப்புணர்வை வழங்குவதற்காக இத்திட்டத்தை கேவிபி மேற்கொள்கிறது. டிஜிட்டல் செயல்பாடுகளை பாதுகாப்பாக மேற்கொள்வது மற்றும் இணைய (சைபர்) மோசடிகளுக்கு எதிராக தற்காத்துக் கொள்வது குறித்து பொது மக்களுக்கு தெளிவுபட கற்பிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். கரூர் வைஸ்யா வங்கியின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) முன்னெடுப்புகளின் ஒரு அங்கமாக இது நடத்தப்படுகிறது.

 

திருச்சிராப்பள்ளி மாநகரின் காவல்துறை ஆணையர் .காமினி, ஐபிஎஸ் முன்னிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பரப்புரை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

 

அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் கேவிபி – ன் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 

இந்த விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளிகள், கல்லூரிகள், முதியோர் இல்லங்கள், பூங்காக்கள், வழிபாட்டுத் தளங்கள், முக்கியமான சந்திப்பு அமைவிடங்கள் மற்றும் ஊராட்சிகளில் விழிப்புணர்வு அமர்வுகளை கேவிபி நடத்தும். அச்சு, வானொலி, கேபிள் டிவி, திரையரங்குகள், விளம்பர பலகைகள், பேருந்து நிலையங்கள், நிழற்குடை அமைவிடங்கள் ஆகியவை உட்பட, பல்வேறு ஊடக வழிமுறைகளையும் இவ்விழிப்புணர்வு திட்டம் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும். கூடுதலாக, அடுத்த 60 நாட்கள் காலஅளவின் போது எல்இடி திரைகள் பொருத்தப்பட்டு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு நடமாடும் ஊர்தி திருச்சி மாவட்டம் முழுவதும் பயணிக்கும். இதில் இரு தொலைக்காட்சி விழிப்புணர்வு படங்கள் (TVCs) திரையிடப்படும்.

 

பொதுமக்களை சென்றடைவதற்கான இந்த களப்பணிக்கும் கூடுதலாக, டிஜிட்டல் சுய பாதுகாப்பு (DSD) மாடலின் வழியாக, பன்மடங்காக அதிகரிக்கச் செய்யும் விளைவை கேவிபி உருவாக்குகிறது. திருச்சியிலுள்ள கேவிபி – ன் அனைத்து கிளைகளும், டிஜிட்டல் சுய பாதுகாப்பு மையங்களாக செயல்படும். பொதுமக்கள், இவ்வங்கி கிளைகளுக்கு சென்று இணைய பாதுகாப்பு குறித்து கேள்விகள் கேட்டு நேரடி விளக்கத்தையும், அறிவையும் பெறலாம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக செய்வது எப்படி என்று பொதுமக்களுக்கு வழிகாட்ட டிஜிட்டல் சுய பாதுகாப்பு சேம்பியன்களாக வங்கி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தில் பரவலான விழிப்புணர்வு ஏற்படுவதை உறுதிசெய்ய பள்ளிகள், கல்லூரிகள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் சமூகத்தின் செல்வாக்கு மிக்க ஆளுமைகள் ஆகியோரையும் இந்த பிரச்சார இயக்கம் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும்.

 

தனது சமூகப்பொறுப்புணர்வு செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிதிசார் செயல்பாடுகளில் கல்வியறிவு மற்றும் இணைய வழியிலான பரிவர்த்தனைகளில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை வழங்குவதில் கரூர் வைஸ்யா வங்கி கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை இந்த 60 நாள் பிரச்சார இயக்கம் எடுத்துக்காட்டுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.