பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்வாரிய தரப்பில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நாளை (20.09.2025) சனிக்கிழமை அன்று திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மின் ரத்து செய்யப்படும் பகுதிகள் பின்வருமாறு.
திருச்சி மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார்புரம், டி.வி.எஸ்.டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே.காலனி, சி.ஹெச் காலனி, உஸ்மான்அலிதெரு, சேதுராமன்பிள்ளைகாலனி, ராமகிருஷ்ணாநகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ்ரோடு, கேசவநகர்.
காஜாநகர், ஜே.கே.நகர், ஆர்.வி.எஸ்.நகர், சுப்பிரமணியபுரம், ராஜாதெரு, அண்ணாநகர், ரஞ்சிதபுரம், சுந்தர்ராஜ்நகர், ஹைவேஸ்காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, முல்லைநகர், செங்குளம்காலனி, இ.பி.காலனி, காஜாமலை, தர்காரோடு, (கலெக்டர் பங்களா) மன்னார்புரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக திருச்சி மன்னார்புரம் கிழக்கு செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.