நாளை 13 -ந் தேதி சுற்றுப்பயணம்:
திருச்சியில் விஜய் பிரச்சார முன்னேற்பாடு பணிகள் தீவிரம். இன்று புஸ்ஸி ஆனந்த் சிறப்பு வழிபாடு .
பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை .
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஏற்கனவே அவர் விழுப்புரம் விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் இரண்டு மாநாடுகளை நடத்தி பிற அரசியல் கட்சிகளை மிரள வைத்தார்.
ஆகவே அவரது மக்களுடன் சந்திப்பு சுற்றுப்பயணம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சுற்றுப்பயணம் நாளை (சனிக்கிழமை) தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் இருந்து தொடங்குகிறது.
விஜய் பிரசாரம்:
திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே நாளை மறுநாள் காலை 10:30 மணிக்கு திறந்த வேனில்
பிரச்சாரம் செய்கிறார். மாநகர காவல் துறை 23 நிபந்தனைகளுடன் பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அதில்,
திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்ட மரக்கடை வரை விஜய் காருக்குள் அமர்ந்தபடி தான் வரவேண்டும். பிரசார வேனில் ஏறி கையசைக்க கூடாது. ரோடு நடத்த அனுமதி இல்லை. விஜய் வாகனத்துக்கு முன்னும் பின்னும் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து செல்ல தடை, விஜய் காருக்கு முன்னால் பின்னால் 5 கார்கள் மட்டுமே செல்ல வேண்டும்.
காலை 10:30 மணியிலிருந்து 11 மணிக்குள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும்.
கர்ப்பிணிகள் மாற்றுத்திறனாளிகளை பிரசாரக் கூட்டத்துக்கு அழைத்து வரக்கூடாது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
முகாமிட்டு ஏற்பாடுகள் தீவிரம்
காவல்துறையினரின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு பிரசாரத்துக்கான முன்னேற்பாடு பணிகளில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தார். இரண்டு நாட்கள் அவர் திருச்சியில் தங்கியிருந்து முன்னேற்பாடுகளை
கவனித்து வருகிறார். ஒன்று திருச்சி கண்டோன்மெண்ட் பாரதியார் சாலையில் உள்ள வழிவிடு முனீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார் .
விஜய்யின்
இந்த முதல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி அப்பல்லோ மருத்துவமனை பின்பு உள்ள விசாலமான காலி இடத்திலும், அரியமங்கலம் ரவுண்டானா பகுதியிலுள்ள பட்டேல் சாலையிலும் வாகனங்கள் நிறுத்த
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரு சக்கர வாகனங்களை சினிமா தியேட்டர்களில் நிறுத்த திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்னையிலிருந்து அதிகாலை புறப்பட்டு சாலை மார்க்கமாக காரில் திருச்சி வருகை தருகிறார்.
அவரது வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருச்சி பிரச்சாரத்தை தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
விஜய் வருகையால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.