2-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க நாம் பாடுபட வேண்டும். அமைச்சர் கே என் நேரு.
இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க
நாம் பாடுபட வேண்டும்.
மத்திய மாவட்ட தி.மு.க கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் இன்று தில்லைநகரில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும், கழக ஆக்கப் பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர் கே. என்.நேரு. பேசியதாவது:-
வருகிற 3-ந் தேதி 41 தொகுதிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
அதிமுக பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணி என அனைவரும் கூறி வருகிறார்கள். திமுக கூட்டணி வலுவாக உள்ளது. புதிதாக கட்சி தொடங்கியுள்ளவர் கூட்டணி வைக்கிறரா ? அல்லது தனித்து தேர்தலை சந்திக்க போகிறாரா? என்பது தெரியவில்லை தற்போது வரை தனித்து தான் தேர்தலை சந்திக்க போகிறேன் என கூறியுள்ளார். இந்தியா முழுவதும் உள்ள அரசியல் பார்வையாளர்கள் மீண்டும் ஸ்டாலின் தான் முதலமைச்சராக வருவார் என கூறி வருகிறார்கள்.
ஒவ்வொரு தேர்தலும் திமுகவிற்கு சவாலாக இருக்கும். ஒரு தேர்தலில் கூட்டணி சேர்ந்து நம்மை எதிர்ப்பார்கள். ஒரு தேர்தலில் ஓட்டை பிரிப்பதற்காக தனியாக கூட்டணி வைத்து எதிர்ப்பார்கள். திமுகவை எதிரியாக கருதி தான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் கலைஞரும் முதலமைச்சர் ஸ்டாலினும் வெற்றி பெற்று வந்துள்ளார்கள்.
நான் திமுகவில் 30 ஆண்டு காலம் மாவட்ட செயலாளராக இருந்தேன். தற்பொழுது தலைமை கழகத்தில் பணியாற்றி வருகிறேன். இதுவரை நான் ஒருவரை கூட கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியது கிடையாது.
அதற்கு தகுந்தது போல் அனைவரும் பணியாற்ற வேண்டும். ஒன்றிய செயலாளர்கள் தங்களால் முடியவில்லை என்றால் அதை முன்பே கூறிவிட்டால் வேறு நபரை அந்த பொறுப்பிற்கு அமர்த்தி விடுவோம்.
திமுகவிற்கு
வெற்றி வாய்ப்பு
திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள பகுதி டெல்டா பகுதி ஆகும்.
நமக்குள் எவ்வளவு மன சஞ்சலங்கள் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு பணியாற்ற வேண்டும்.
இரண்டாவது முறையாக முதலமைச்சர் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்கிற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.
நம்முடைய பகுதி கலைஞர் காலத்திலும் சரி, தற்போதும் சரி திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது ,
இவ்வாறு கே.என். நேரு பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட
பொருளாளர் துரைராஜ், தொகுதி பொறுப்பாளர்கள்
பழஞ்சூர் செல்வம்,
ஆடுதுறை உத்திராபதி, சந்திரசேகர் ,மாவட்ட துணை செயலாளர் , கவுன்சிலர் முத்து செல்வம்,மத்திய மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்,
ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்த நல்லூர் கதிர்வேல்,பகுதி செயலாளர்கள் மோகன் தாஸ், காஜாமலை விஜய்,நாகராஜன்,கமால் முஸ்தபா,ராம்குமார்,முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்,மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர் சிங்காரம்,வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன் குமார்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,வட்டச் செயலாளர்கள் வாமடம் சுரேஷ் புத்தூர் பவுல்ராஜ், மார்சிங் பேட்டை செல்வராஜ் ,தனசேகர்,
பி.ஆர் பாலசுப்ரமணியன்,
கவுன்சிலர்கள் கவிதா செல்வம், மஞ்சுளா பாலசுப்பிரமணியன் ,ராமதாஸ் புஷ்பராஜ்,
நிர்வாகிகள் இன்ஜினியர் நித்தியானந்தம், அரவானூர் தர்மராஜன்,ரஜினி கிங், சர்ச்சில், பந்தல் ராமு,
தென்னூர் அபூர்வாமணி,
எம் ஆர் எஸ் குமார், ராஜ்குமார்
உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.