திருச்சி மாவட்ட டேக்வாண்டோ போட்டியில் பாலக்கரை சிறுமிக்கு தங்கப்பதக்கம்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட டேக்வாண்டோ
போட்டிகள் ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ அசோசியேசன்,
தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேசன்,
இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , தமிழ்நாடு
ஒலிம்பிக் அசோசியேஷன் இணைந்து நடத்திய இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் நான்கு வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம்
கிமேக்ஸ்- ஹைசிந்த்
தம்பதியரின் மகள்
கே.அவ்ரினா டேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
இதை அடுத்து அவருக்கு தமிழ்நாடு ஸ்டேட்வாண்டோ அசோசியேஷன் டெக்னிக்கல் இயக்குனர் செல்வமணி தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
விழாவில் திருச்சி ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ அசோசியேஷன் தலைவர் சுமதி பப்ளிகேஷன்ஸ் ஹரிஹரன் , திருச்சி ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ அசோசியேசன் செயலாளர் டி எம் எஸ் சரவணன் மற்றும் பல்வேறு டேக்வாண்டோ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.