பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம். அதன்படி திருச்சி மாவட்டத்தில் இன்று மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் ஸ்ரீரங்கம் கோட்டத்துக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் இருந்து 11 கே.வி.கோவில் மின்பாதையில் பராமிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நான்கு உத்தரவீதிகள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு அடையவளஞ்சான் வீதிகள், வடக்குவாசல், வசந்தநகர், ஆர்.எஸ்.ரோடு, தசாவதார சன்னதி, கிழக்குவாசல் தெற்கு தெரு, மேலவாசல், பட்டர்தோப்பு, வடக்குதேவி தெரு, தாயார் சன்னதி, பூ மார்க்கெட், ஆறுமுகம் பிள்ளைத்தெரு, மேட்டுத்தெரு மற்றும் மாணிக்கம்பிள்ளைதெரு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று திருச்சி, திருவெறும்பூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை திருவெறும்பூர், நவல்பட்டு, டி-நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலுார், புதுத்ெதரு, வேங்கூர், அண்ணாநகர், சூரியூர், எம்ஐஇடி.சோழமாநகர், பிரகாஷ்நகர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, நேருநகர்,
போலீஸ்காலனி, பாரத்நகர் 100 அடி ரோடு, குண்டூர், மலைக்கோவில், பர்மா காலனி, கக்கன் காலனி, பூலாங்குடி, பழங்கனாங்குடி, மற்றும் காவோி நகர், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.