திருச்சி மாநகரில் கேரளாவுக்கு அதிக அளவில் கடத்தப்படும் ரேஷன் அரிசி, கலெக்டரிடம் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் திலீப் தலைமையில் புகார்.
சத்திரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை:
திருச்சி மாநகரில் கேரளாவுக்கு அதிக அளவில் கடத்தப்படும் ரேஷன் அரிசி
மாவட்ட கலெக்டரிடம் பாட்டாளி மக்கள் கட்சி புகார்.
திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் திலீப் குமார் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் சரவணன் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி மூலம் நிறைய வளர்ச்சிப் பணிகளை கண்டுள்ளது.ஆனால் அங்கு உள்ள வணிக வளாகம் அனுமதியின்றி கட்டப்பட்டு வாகன பார்க்கிங் வசதி இல்லாததால் கண்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.இதனால் பள்ளி கல்லூரி சென்று வரும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் நியாய விலை கடைகள் உள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் திருச்சி மாநகரில் அதிக அளவில் கடத்தப்பட்டு மில்லில் அரைத்து வாகனங்களில் ஏற்றி கேரளாவுக்கு கடத்திச் செல்கின்றனர்.பொதுமக்கள் நலன் கருதி கடத்தல் கும்பலை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் திலீப் குமார் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் வினோத், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் ஐயப்பன், மலைக்கோட்டை பகுதி இளைஞரணி செயலாளர் கார்த்திக், மாவட்ட சங்க தலைவர் லலிதா கருணாகரன், மாநில மகளிர் சங்கத் துணைச் செயலாளர் ஜானகி, பாலக்கரை பகுதி பொறுப்பாளர்கள் ரங்கராஜ், மணி, மூர்த்தி, சாமுவேல். பரத், லோகு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.