திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்
அன்பில் பொய்யாமொழியின்
படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை.
விழியிழந்தோர் பள்ளி மற்றும் வீடற்றோர் இல்லத்தில் காலை உணவும் வழங்கினார்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திராவிட இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கத்தின் புதல்வரும், திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவருமான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான, அன்பில் பொய்யாமொழியின் 26 -ம் ஆண்டு நினைவு தினம், திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், வைக்கப்பட்டிருந்த அவரது த உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திமுக நிர்வாகிகள் புடை சூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
இதைத் தொடர்ந்து திருச்சி கல்லுக்குழி விழியிருந்தோர் பள்ளி மற்றும் அன்னதான சமஜானம் வீடு அற்றோர் தங்கும் விடுதியிலும் காலை உணவும் அன்னதானமாக வழங்கினார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .
இந்நிகழ்வில் மாநகர செயலாளர்
மு. மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன்
கே என் சேகரன் சபியுல்லா பகுதி செயலாளர் மோகன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை செயலாளர்கள்- நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.