திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து. ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை .
திருச்சி திருவானைக்கோவில் அழகிரி புரததைச் சேர்ந்தவர் ராகவேந்திரன் (வயது42 )ஆட்டோ டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (வயது 23). இவரும் ஆட்டோ ஓட்டுநர், மேலும் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது இந்த நிலையில் கடந்த 26 ந் தேதி இவர் குடித்துவிட்டு ராகவேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அவர் முகமது அலியை செல்போன் செயலி ஆட்டோ சங்கத்திலிருந்து நீக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முகமது அலி கத்தியால் குத்தி ராகவேந்திரனை காயப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து முகமது அலி ஜின்னாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.