திருச்சியில் ரூ.8 லட்சம் கடனை திருப்பி கேட்ட
நண்பனை நாயை விட்டு துரத்த வைத்தவர் மீது வழக்கு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நாச்சி பட்டுவை சேர்ந்தவர் தேசிங்கு ( 40 ) இவரது நண்பர் திருச்சி ஏர்போர்ட் ஜேகே நகர் சேர்ந்த தசரதன் ( வயது 59 ) இவர் தேசிங்குவிடமிருந்து ரூபாய் 8 லட்சம் கடனாக பெற்றுள்ளார் இந்த நிலையில் அவர் தசரதனிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க சென்ற போது இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் தசரதன் அவரை தகாத வார்த்தைகள் திட்டி தன் நாயை ஏவி விட்டு அவரை விரட்டி உள்ளார் இதில் தேசிங்கு கீழே விழுந்து காயமடைந்தார் .
இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.