திருச்சி காந்தி மார்க்கெட் நிச்சயம் மாற்றப்படாது.காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்.
ரூ 50 கோடியில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கும் .
திருச்சி காந்தி மார்க்கெட் நிச்சயம் மாற்றப்படாது.
அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
திருச்சி காந்தி மார்க்கெட் நிச்சயம் மாற்றப்படாது. அங்கே தான் இருக்கும் .ரூ 50 கோடியில் வளர்ச்சிப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
.திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது. 50 கோடி ரூபாயில் வளர்ச்சி பணிகள் தொடங்கும். காந்தி மார்க்கெட் அங்கே தான் இருக்கும். ஏற்கனவே ஒரு மந்திரி சூடுபட்டது போதது.நாங்கள் சூடுபடணுமா ? அது அங்கே தான் இருக்கும்.அதில் எந்த மாற்றமும் இல்லை. என தெரிவித்தார் .
(.புதன்கிழமை அன்று திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காந்தி மார்க்கெட்டை மாற்றக் கூடாது என கூட்டமைப்பின் தலைவர் எம் கே எம் காதர் மைதீன் தலைமையில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது அதற்கு இன்று அமைச்சர் உறுதி அளித்து பதில் அளித்துள்ளார் . இது காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது )
மேலும் த.வெ.க
தலைவர் விஜய் மதுரைமாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரை அங்கிள் என விமர்சனம் செய்துள்ளாார்.
அவருடைய தராதரம் அவ்வளவுதான். ஒரு மாநில முதலமைச்சரை, பெரிய கட்சியின் தலைவரை, 40 ஆண்டு காலமாக அரசியலில் இருப்பவரை நேற்று அரசியலுக்கு வந்தவர் சொல்லுவது, தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது அழகல்ல.அவருக்கு மக்கள் நல்ல பதில் சொல்வார்கள். நாங்களும் தேர்தலில் சரியான பதில் சொல்வோம். அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. 10 பேர் 50 பேர் கூடிட்டாங்க என்பதற்காக எதுவேணுமானாலும் பேசுவது சரியாக இருக்குமா? சரியாக இருக்காது .
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
பேட்டியின் போது திருச்சி திமுகமாவட்டத் துணைச் செயலாளர் முத்து செல்வம்,பகுதி செயலாளர் மோகன்தாஸ்,மண்டல குழு தலைவர் துர்கா தேவி,
கவுன்சிலர்கள் புஷ்பராஜ்,ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.