வருவாய் துறையினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகம் முன் திடீர் தொடர் காத்திருப்பு போராட்டத்தால் பரபரப்பு
முதுநிலை வருவாய் ஆய்வாளர் பொன்மாடசாமி என்பவரை வருவாய் துறை சட்ட ஒழுங்கு பிரிவில் இருந்து, மனுக்கள் மீதான பரிசீலனை பிரிவுக்கு (முதல்வரின் முகவரி,) உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணி ஒருங்கிணைப்பு,மக்கள் குறைதீர் நாள் மனு,முதல்வருக்கான மனுக்கள், இடமாற்றம் செய்ததை கண்டித்து, வருவாய் துறையினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட நிர்வாகிகள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், வருவாய்த் துறையினருக்கான பணிச்சுமையை குறைக்க வலியுறுத்தி,
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்,
அரசு கொடுக்கும் கால அளவை நீட்டிக்க வேண்டும்,
அரசு கொடுத்துள்ள குறைந்த பட்ச கால அவகாசத்திற்கு முன்னதாகவே பணிகளை முடித்துக் கொடுக்க நிர்பந்திக்க கூடாது,
புதிய ஆட்களை போதுமான அளவு நியமிக்காமல் புதிய திட்டங்களை மட்டும் அறிவிப்பதை கைவிட வேண்டும்,
உள்ளிட்ட தீர்மானங்களை மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட வருவாய் அதிகாரியிடமும் கொடுத்ததன் விளைவாக, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பொன்மாடசாமி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதனை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்ட வருவாய் துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்று கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது .