Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரசு மாதிரி பள்ளியில் போன மாதம் ஒரு மாணவி இந்த மாதம் ஒரு மாணவர் தற்கொலை . இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் சொல்லணும். அண்ணாமலை.

0

'- Advertisement -

 

திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா் நேற்று வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

 

வேலூா் மாவட்டம், குடியாத்தம் வசந்தம் நகரைச் சோ்ந்த பலராமன் மகன் யுவராஜ் (வயது 17). இவா், திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், அவா் நேற்று வியாழக்கிழமை காலை விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

 

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம், திருவெறும்பூா் ஏஎஸ்பி அா்விந்த் பனாவத் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். துவாக்குடி போலீஸாா், மாணவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

 

இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

இரண்டு மாதங்களில் இரண்டாவது தற்கொலை: மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதியுடன் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்ட இந்த அரசு மாதிரிப் பள்ளியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனா்.

 

இந்நிலையில், இங்கு பிளஸ் 2 படித்து வந்த திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி கடந்த மாதம் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதைத் தொடா்ந்து பிளஸ் 2 மாணவா் ஒருவரும் தற்போது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவா்கள் மன உளைச்சலில் இதுபோன்ற தற்கொலை முடிவுகளை எடுக்கிறாா்களா என மாணவா்களின் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

போன மாதம் ஒரு மாணவி இந்த மாதம் ஒரு மாணவர் . இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் சொல்லணும் என முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.