திருச்சியில் ஆயுதத்துடன் சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கும்பல் – 2 பேர். ஆயுதத்துடன் கைது 4 பேர் தப்பி ஓட்டம்
திருச்சியில் ஆயுதத்துடன் சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கும்பல் – 2 பேர். ஆயுதத்துடன் கைது 4 பேர் தப்பி ஓட்டம்
திருச்சி கோணக்கரை ரோடு அண்ணாமலை ரோடு பகுதியில் ஆயுதத்துடன் 6 பேர் கொண்ட கும்பல் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் வாகன சோதனை சென்று கண்காணித்தனர் .அப்போது 6 பேர் கொண்ட கும்பல் ஆயுதத்துடன் நிற்பது தெரிய வந்தது. அவர்களை இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் உறையூரை சேர்ந்த முகமது முஸன் (வயது 24), புத்துரைச் சேர்ந்த பிரசன் இம்மானுவேல் (வயது 21 )ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையில் உறையூரை சேர்ந்த முகமது சித்திக், முகமது ஆசிக், முகமது ஜாஸ் பசித், உஸ்மான் ஆகிய நான்கு பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பயங்கர ஆயுதங்களுடன் சதித்திட்டம் தீட்டிய மர்ம கும்பலால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.